Ticker

6/recent/ticker-posts

கூகுளுடன் டிவிட்டர் ஒப்பந்தம் ?

டிவிட்டரில் பதிவிடப்பட்ட தகவல்களை எளிதாக தேடி கண்டுபிடிக்க கூகுள் நிறுவனத்துடன் டிவிட்டர் நிறுவனம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  பொதுவாக சமூக வலைதளங்களில் உள்ள தகவல்கள் கூகுள் உள்ளிட்ட தேடுபொறிகளில் தேட முடியாது. தற்போது, டிவிட்டரின் நடவடிக்கையால் சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தாங்கள் படித்த பழைய டிவிட்களையும் இனி எளிதாக தேடி படிக்க முடியும் என்கின்றனர்.  இந்த வசதி விரைவில் கூகுள் தேடுபொறியில் கிடைக்கும் என கூறப்படுகிறது இந்த ஒப்பந்தம் தொடர்பாக அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் இது குறித்த தகவல் பரவலாக சமூக வலைதளங்களில் உலவுகிறது. 

Post a Comment

0 Comments