Ticker

6/recent/ticker-posts

ஐ.பி.எல் கிரிக்கெட் வீரர்கள் ஏலம் இன்று நடைப்பெறவுள்ளது

8-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ஏப்ரல் 8-ந்தேதி முதல் மே 24-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி அணிகள் மொத்தம் 123 வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதில் 44 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

கழற்றி விடப்பட்ட வீரர்களும், புது வரவுகளும் ஏலத்திற்கு வருகிறார்கள். ஐ.பி.எல். ஏலம் பெங்களூரில் நட்சத்திர ஓட்டலில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது.

ஏலத்தில் இந்திய அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங்கும் இடம் பெற்றுள்ளார். கடந்த முறை அவரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த பெங்களூர் ராயல்
சேலஞ்சர்ஸ் அணி, அவரது செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் விடுவித்து விட்டது. என்றாலும் அண்மையில் ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடியதால் இந்த தடவையும் அவர் கணிசமான தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுவராஜ்சிங்கின் அடிப்படை விலை ரூ.2 கோடியாகும்.

ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச், மைக் ஹஸ்சி, இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹாலஸ், இயான் மோர்கன், கெவின் பீட்டர்சன், இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே, தில்ஷன், சங்கக்கரா, மேத்யூஸ், தென்ஆப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் அம்லா, நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், இந்தியாவின் முரளிவிஜய், தினேஷ் கார்த்திக் உள்ளிட்டோரும் கவனித்தக்க வீரர்களாக இருக்கிறார்கள். இதில் அம்லாவின் தொடக்க விலை ரூ.2 கோடியாகும்.

Post a Comment

0 Comments