அமெரிக்கா வாஷிங்டன், பிப்ரவரி 14- , வடக்கு கரோலினா மாகாணத்தில் மத எதிர்ப்பாளர் ஒருவர் மூன்று இஸ்லாமிய மாணவர்களை கொடூரமாகக் கொன்ற சம்பவத்திற்கு பாராக் ஒபாமா கண்டனம் தெரிவித்துள்ளார்.
தோற்றமோ அல்லது அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்றோ அமெரிக்காவில் யாருக்கும் குறிவைக்க முடியாது என பாராக் ஒபாமா தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, மூன்று முஸ்லிம் மாணவர்களும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு
தெரிவித்தார். இச்சம்பவத்தில் டியா ஷாடி பராகாட் (வயது 23), அவருடைய புதுமனைவி யூசோர் முகமது அபு-சல்ஹா (வயது 21), மற்றும் அவர்களது தங்கை ரம்சான் முகமது ஆகிய மூவரும் மிகக் கொடூரமாக அவரது அண்டை வீட்டுக்காரரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
வாகனத்தைத் தவறாக நிறுத்தியதற்காக அம்மூன்று மாணவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் போலீசார் இச்சம்பவத்தில் வேறு உள்நோக்கம் எதுவும் உள்ள என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும், அம்மூவரும் அவர்கள் சார்ந்துள்ள மதம் காரணமாகவே சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மூன்று இஸ்லாமிய மாணவர்கள், அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக உடனடியாக கருத்துரைக்காதது தொடர்பில், அமெரிக்க அதிபர் ஒபாமா அனைத்துலக ரீதியில் கடும் விமர்சனத்தை எதிர்நோக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments