வெனிசுலா வான் எல்லையில் அத்துமீறி நுழைந்த விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அருபா தீவு அருகே, தங்களது வான் எல்லையில் அத்துமீறி விமானம் ஒன்று நுழைந்ததாகவும் தரையிறங்குபடி ராணுவம் கூறியதை ஏற்க மறுத்து விமானம் தொடர்ந்து பறந்ததால் அதனை சுட்டு வீழ்த்தியதாகவும் பாதுகாப்பு துறை அமைச்சர் விளாதிமிர் பட்ரினோ தெரிவித்துள்ளார். எனினும் விமானத்தில் பயணித்தார்கள் குறித்த தகவல் வெளியிடப்படவில்லை. இதனிடையே விமானப் பாகங்கள் சிதறிக் கிடக்கும் பகுதியில் 400 பைகளில் போதைமருந்துகள் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments