அண்மையில் வத்தளை பிரதேச சபையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அமைச்சர் ஜோன் அமரதுங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை சபாநாயகரிடம் (07) நேற்று சமர்ப்பத்திருந்தனர்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நியாயப் பத்திரமாக கருத்திற்கொண்டு, விவாதத்திற்கும், வாக்கெடுப்பிற்கும் எடுக்காதிருக்க ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் இணங்கியிருப்பதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையே இடம்பெற்று பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 114 பேரும் கையெழுத்திட்டுள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

0 Comments