Ticker

6/recent/ticker-posts

உக்ரைனில் அதிகார மாற்ற ஒப்பந்தத்திற்கு ஒபாமா ஒப்புதல்


உக்ரேன் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஒரு அதிகார மாற்ற ஒப்பந்தத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஒப்புதல் அளித்துள்ளார். இது, உக்ரேனின் தற்போதைய நெருக்கடியைத் தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உக்ரேனின் தற்போதைய நிலவரம் குறித்து சி.என்.என். செய்தி ஸ்தாபனத்திற்கு ஒபாமா வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்நேர்காணலில் ஒபாமா தொடர்ந்து பேசும்போது, ‘அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் ஒரு மோதல் நிலைமை உருவாகும் என்பதைக் காண அமெரிக்காவுக்கு அல்லது உலகளாவிய ரீதியில் விருப்பம் உள்ளது. ஆனாலும், அதற்கான வாய்ப்புக்கள் குறைவு.
வொஷிங்டன் தொடர்ந்தும் மொஸ்கோவிற்கு அழுத்தத்தைப் பிரயோகிக்கும். அத்துடன் உக்ரைன் எல்லையில், நேட்டோவின் பாதுகாப்பும் பலப்படுத்தப்படும்’ என்றார்.

Post a Comment

0 Comments