ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதுவரை 52 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 70 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 114 புள்ளிகளுடன் 2 வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க அணி 113 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும் உள்ளது.
அதேபோல், ஒரு நாள் துடுப்பாட்ட தரவரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டி விலியர்ஸ் 891 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். 2 வது இடத்தில் இருந்த இந்திய வீரர் விராட் கோலி 831 புள்ளிகளுடன் 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். மற்றொரு தென் ஆப்பிர்க்க வீரர் ஹசிம் ஆம்லா 867 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். உலகக் கோப்பைக்கு இன்னும் சிறிது நாட்களே உள்ள நிலையில் ஒரு நாள் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது.

0 Comments