Ticker

6/recent/ticker-posts

ஜோன்ஸ்டனின் ‘ வயம்ப டிஸ்ரிலர்ஸ்’ மதுபான நிறுவனம் பாரிய வரி மோசடி!


முன்னாள் அமைச்சரும், குருணாகலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் ஃபெர்னாண்டோ, தனது உறவினர்கள் இருவரின் பெயர்களில் நடத்தி வந்த ‘ வயம்ப டிஸ்ரிலர்ஸ்’ மதுபான நிறுவனத்தின் அனுமதிப் பத்திரத்தை கலால் திணைக்களம் ரத்து செய்துள்ளது.
கொழும்பு, தெமட்டகொடைப் பிரதேசத்தில் நான்கு லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட 68,000 மதுபான போத்தல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்குப் பின்பே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மட்டுமன்றி, குருணாகலை மற்றும் யாழ்ப்பாணத்தில் அமையப்பெற்றுள்ள மேற்படி நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து களஞ்சியசாலைகளும் சீல் வைக்கப்பட்டிருப்பதாகவும் கலால் நிறுவனம் அறிவித்துள்ளது.
வயம்ப டிஸ்ரிலர்ஸ் நிறுவனம் பாரிய வரி மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments