இனக்கொலை புரிந்த ராஜபக்ஷ கூட்டத்தை, அனைத்து உலக நீதிமன்றக் குற்றக்கூண்டில் நிறுத்தித் தண்டிப்பதையும், பொது வாக்கெடுப்பு மூலம் சுதந்திரத் தமிழ் ஈழம் அமைப்பதையும் ஒரே இலக்காகக் கொண்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பாடுபடும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 23 ஆவது பொதுக்குழு கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் தூத்துக்குடியில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

0 Comments