தலவாக்கலை நகரில் பொலிஸ் பிடியில் இருந்து தப்பி சென்ற இளைஞன் மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போயுள்ளார்.
குறித்த நபர் பாய்ந்ததுக்கான காரணம் குறித்த பொலிஸார் தான் என கோரி பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி தலவாக்கலை பூண்டுலோயா பிரதான வீதியை மறித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தலவாக்கலை நகரத்தில் பாபுள் வெற்றிலையை கையில் வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்து, விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்.
கொண்டு செல்லும் வழியில் பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பி ஓடி மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் பாய்ந்து காணாமல் போயுள்ளார்.
குறித்த சந்தேக நபர் நீர்தேக்கத்தின் பாலத்திலிருந்து கீழே 40 அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞன் தொடர்பாக எந்த விடயமும் தெரியாதெனவும் இவர் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாகவும் குறித்த நபரை தேடுதல் பணிகளிலும் தலவாக்கலை பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

0 Comments