விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகம் ரஞ்சனி ஜயகொடவிற்கு எதிராக விளையாட்டுத்துறை மேம்பாட்டுத் திணைக்களத்தின் பிரதான கணக்காய்வாளரினால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் முதல் கட்ட விசாரணைகளுக்கு அமைய ரஞ்சனி ஜயகொடி குற்றவாளியெனத் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தாம் பதவியிலிருந்து விலகுவதாக ரஞ்சனி அறிவித்துள்ள போதிலும், அவர் தொடர்ந்து பதவி வகித்த வருகிறார்.
இந்த நிலையில், குறித்தப் பதவியிலிருந்து ரஞ்சனி அகற்றப்படாவிடின் இதற்கதெிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இலங்கை விளையாட்டுத்துறை அதிகாரிகளின் சங்கம் எச்சரித்துள்ளது.
கழகங்களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டிய பணத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவே இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

0 Comments