இந்த விழாவில் பிரதமர் நரேந்திர
மோடி கலந்து கொண்டு விமான கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
பெங்களூருவில் நடந்து வரும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியில் இன்று ரெட்புல் விமானாங்கள் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது எதிர்பாரதவிதமாக ரெட்புல் விமானாங்களின் இறக்கைகள் உரசியதில் 4 பேர் காயமுற்றனர். பின்னர் விமானங்கள் பத்திரமாக் தரையிறக்கபட்டது.
இந்த விமானங்கள் சுமார் 500 அடி முதல் 700 அடி வரை விமானங்கள் பறந்து கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து நிகழ்ச்சியின் பாதுகாப்பு குழு விபத்து குறித்து விசாரித்து வருகிறது.
இந்த கண்காட்சியில் 350 இந்திய நிறுவனங்கள் மற்றும் 300 வெளிநாட்டு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. விமான தொழில் சார்ந்த முதலீட்டாளர்களும் பங்கேற்று உள்ளனர். சர்வதேச அளவில் இது ஒரு மிகப்பெரிய விமான கண்காட்சி என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments