'வாட்ஸ் அப்' மூலம் எதிர் தரப்பில் உள்ளவருடன் பேசவும் வசதியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ் அப் நிறுவனம் .
படங்கள் ,வீடியோ மற்றும் தகவல்களை பகிர்ந்துகொள்ள வாட்ஸ் அப் செயலி பயன்படுகிறது . இந்த வசதிகளுடன் பேசும் வசதியையும் இணைக்க வாட்ஸ் அப் நிறுவனம் முயற்சி மேற்கொண்டிருந்தது . இந்நிலையில் இந்தியாவில் சிலருக்கு மட்டும் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பொதுவான பயன்பாட்டிற்கு வெளியிடவில்லை . இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் சார்பிலும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை .
அண்ட்ராய்ட் இயங்குதளத்திற்கான வாட்ஸ் அப் அப்ட்டே apk அந்நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த செயலியை பயன்படுத்தினால் எதிர் தரப்பில் உள்ளவருடன் பேசும் வசதியை பெறலாம் . எதிர் தரப்பில் உள்ளவரும் அந்த செயலியை பயன்படுத்தினால் மட்டுமே பேசமுடியும் .உள் அழைப்பு, வெளி அழைப்பு எண்களும் ஸ்மார்ட் போனைப்போலவே இதிலும் சேமிக்கப்படும்.

0 Comments