இஸ்லாம் மாா்க்கம் குறித்த புரிதலை மற்ற மதத்தவரிடமும் ஏற்படுத்தும் விதமாக பாரசில் பள்ளிவாசலுக்கு செல்வதற்கு அனைத்து மதத்தினருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாரிசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பத்திரிக்கை அலுவலகம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்திரிக்கையாளர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்துவர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இதனிடையே இதை தடுக்கும் விதமாக அங்குள்ள பள்ளிவாசலுக்கு அனைத்து மதத்தினருக்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாம் மாா்க்கம் குறித்து அனைவரும் அறிந்துகொள்ளும் பொருட்டும், சகோதரத்துவத்தை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக முஸ்லிம்கள் அறிவித்துள்ளனா்.
0 Comments