Ticker

6/recent/ticker-posts

மஹிந்தவை பிரதமராக ஏற்கவேண்டுமென கோரி பேரணி

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ஏற்க வேண்டும் கோரி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சில கட்சிகள் இன்று பேரணி நடத்தவுள்ளன.

குறித்த கவனயீர்ப்பு பேரணி இன்று நுகேகொடையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'மஹிந்தவுடன் நாட்டை மேம்படுத்த நீங்கள் தயாரா' என்ற தொனிப்பொருளில் இந்த பேரணி நடத்தப்படவுள்ளது.

எனினும் இந்த பேரணியில் சிறிலங்கா சுதந்திர கட்சி கலந்து கொள்ள மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின், மக்கள் ஐக்கிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி. ஜனநாயக இடதுசாரி முன்னணி மற்றும் பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளே இணைந்து கொள்ளவுள்ளனர்.

Post a Comment

0 Comments