Ticker

6/recent/ticker-posts

பகிடிவதை காரணமாக உயிரை மாய்த்த சபரகமுவ பல்கலைக்கழக மாணவி!

சபரகமுவ பல்கலைக்கழக மாணவியிருவர் தனது வீட்டில் வைத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


சபரகமுவ பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும்  23 வயதான எஸ். எஸ். அமாலி என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஹோமாகமையைச் சேர்ந்த குறித்த மாணவி நேற்று , 17 ஆம் திகதி இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

பகிடிவதை காரணமாகவே இத் தற்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.  குறித்த மாணவி தற்கொலை செய்வதற்கு முன்னர் கடிதமொன்றை எழுதி வைத்துள்ளதுடன் அதில் தனது பல்கலைக்கழக மாணவர்களுக்கு தனது பூதவுடலை பார்வையிடுவதற்கு அனுமதிக்க வேண்டாமெனவும் தெரிவித்துள்ளார்.
www.hirunews.lk

Post a Comment

0 Comments