Ticker

6/recent/ticker-posts

இலங்கையா் மூவருக்கான மரண தண்டனை ஊா்ஜிதம்!


யெமன் பிரஜை ஒருவரை  கொலை செய்த குற்றத்திற்காக  மூன்று இலங்கையர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை சவுதி அரேபியாவின் ஜித்தா உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.

சவூதி பிரதம நீதியரசர் தலைமையில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டதாக அரபு செய்தி சேவை தெரிவித்துள்ளது.
கொள்ளை மற்றும் கொலை குற்றச்சாட்டுகளில் கயான் உதித்த நாணாயக்கார, துஷார தினேஷ் பெரேரா, நிலந்த பண்டார தென்னகோன் ஆகிய மூன்று இலங்கையர்களும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த குற்றச்செயல்களுடன் சம்பந்தப்பட்ட ரஞ்சித் வசந்த குமார, நூர் முஹம்மத், ஆா், அப்துஸ் ஸமத் ஆகியோருக்கும், மேலும் ஐந்து இந்தியா்களுக்கும்  சிறைதண்டனையும் சாட்டையடி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளதாக அரப் நிவ்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கில் குறுதிப் பணம் வழங்குவதன் மூலம் குற்றவாளிகள் மன்னிப்பு கோர முடியாது என ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் குழாம் தீர்மானித்துள்ளதாகவும் அரபு செய்தி சேவை தெரிவித்துள்ளது
உமா் யஸ்லம் என்ற 60 வயதான யெமன் பிரஜை​யே 2007 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments