அமெரிக்காவில் 87 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து அம்மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை ஒட்டியுள்ள ஹெமெட் பகுதியில் ஒரு முதியோர் காப்பகம் உள்ளது. அந்த காப்பகத்திற்குள் திடீரென நுழைந்த இரண்டு பள்ளி மாணவர்கள் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த 87 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்தனர். அதோட விடாமல் 2 பாட்டில் பிளீச்சிங் பவுடரை தண்ணீரில் கலந்து மூதாட்டியின் வாயில் ஊற்றி அவரை கொலை செய்ய முயன்றனர். இதையடுத்து அந்த மூதாட்டி அறைக்குள் இருந்த அபாய அறிவிப்பு பொத்தானை அழுத்தியதால் காவலாளிகள் ஓடோடி வந்த மூதாட்டியை காப்பாற்றினர். அபாய அறிவிப்பின் சப்தம் கேட்டதும் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
அதன்பின், அந்த மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அந்த மூதாட்டி நடமாட முடியாத முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது, சக்கர நாற்காலியின் துணையுடன் உலவி வருகிறார். மூதாட்டியை இந்த நிலைக்கு ஆளாக்கிய மாணவர்கள் ரூபன் ஜோஸ் மெலன்சன் (15), ரேமன்ட் மைக்கேல் மிரிண்டா(14) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து அவர்கள் மீது இரண்டாண்டுக்கு முன்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 18 வயது நிறைவடையும் வரை சிறார்கள் காப்பகத்திலும், 18 வயதுக்கு பின்னர் கைதிகளுக்கான சிறையிலும் இந்த 30 ஆண்டு தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் ஆஜரான அந்த மூதாட்டி, நீங்கள் எனக்கு செய்துள்ள தீங்கு என்ன? என்பதை எனது முகத்தை ஒரு முறை பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். எனது சுதந்திரத்தை பறித்து விட்டீர்கள். நீங்கள் கட்டாயம் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் என இரண்டு பேரையும் பார்த்து கண்ணீர் மல்க கூறிய காட்சி, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.



0 Comments