இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதம் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இலங்கைக்கான விஜயத்தை எதிர்வரும் 6ஆம் திகதி மேற்கொள்ளவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு இலங்கை வரவுள்ள சுஷ்மா சுவராஜ், இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் தொடர்பில் ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
எதிர்வரும் 13ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி முதன்முறையாக இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இதற்கு முன்னர், 1987ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அதன் பின்னர், கடந்த 28 வருடங்களில் இந்திய பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

0 Comments