Ticker

6/recent/ticker-posts

யோசித்தவுக்கு குற்றத்தடுப்பு பிரிவினர் அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மகன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித்தவிடம் வாக்குமூலத்தை பெற்றுக்கொள்வதற்காக அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 13ஆம் திகதியன்று கொழும்பு நாரஹேன்பிட்டியில் உள்ள அரச களஞ்சியத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறியரக ஹெலிகொப்டர் தொடர்பிலேயே இந்த வாக்குமூலம் பெறப்படவுள்ளது.
குறித்த ஹெலிகொப்டர் சிங்கள திரைப்பட தயாரிப்பாளர் சந்திரன் ரட்ணத்துக்கு சொந்தமானது. எனினும் யோசித்த கோரியமையால் அதனை தாம் அவருக்கு வழங்கியதாக சந்திரன் ரட்ணம் முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments