Ticker

6/recent/ticker-posts

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கிய பெண் போராளி கைது..!

தனி ஈழத்துக்காக போராடி வந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படையில் பெண் போராளிகள் குழுவின் தலைவியாக பொறுப்பு வகித்த புருகேசு பஹிரதி என்பவரை போலீசார் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

"கடல் புலிகள்" படையின் பெண் போராளிகள் குழுவின் தலைவியாக இருந்த புருகேசு பஹிரதி (41)  இலங்கையில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு செல்ல முயன்றபோது தீவிரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கொழும்புவில் இருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


1997-ம் ஆண்டில் இருந்து 2000-ம் ஆண்டு வரை "கடல் புலிகள்" படையின் பெண் போராளிகள் குழுவின் தலைவியாக இருந்த புருகேசு பஹிரதி, கடந்த 2005-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு தப்பிச் சென்றதாக கூறப்படுகின்றது. 

கடந்த மாதம் 9-ம் திகதி இலங்கைக்கு திரும்பிவந்த அவர் மீண்டும் பிரான்சுக்கு திரும்பிச் செல்ல முயன்றபோது நேற்று தீவிரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டதாக தெரிகின்றது. 

இவரது கணவரான சுப்பிரமணியம் ஜெயகணேசன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து, இவ்வியக்கத்தின் சர்வதேச நிதி தொடர்புகளை நிர்வகித்துவந்த முக்கியப் புள்ளிகளில் ஒருவராக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments