Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி நாளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (03) வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.அவர் ஜனாதிபதியாக தெரிவாகிய பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி வடக்கு கிழக்கு அரசியல் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும் திருகோணமலை மாவட்ட குழுக்கூட்டத்திலும் ஜனாதிபதி நாளை கலந்துகொள்ளவுள்ளார்.
மேலும் திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழகத்தில் 3 புதிய விடுதிகளையும் விளையாட்டுத் தொகுதியையும் ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments