புற்று நோயின் தாக்கம் தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் வகையிலான புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலமொன்று மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.
குறித்த ஊர்வலத்தில், மட்டக்களப்பு புற்று நோய் சங்கத்தின் தலைவர் வைத்தியர் என்.சயணொளிபவன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.தவராஜர், லயன்ஸ் கழக தலைவர் ஏ.செல்வேந்திரன், றோட்டரிக் கழக தலைவர் ஏ.டொமினிக் ஜோர்ஜ் உட்பட பிரமகர்கள், பாடசாலை மாணவர்கள், மருத்துவ தாதியர்கள், மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது, புற்றுநோயின் தாக்கம் குறித்த சுலோகங்களை கொண்ட பதாதைகளை தாங்கியவாறு மட்டக்களப்பு கல்லடிப்பாலத்திலிருந்து காந்திப் பூங்கா வரை ஊர்வலமாகச் சென்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட புற்று நோய் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு மட்டக்களப்பு லயன்ஸ் கழகம், மட்டக்களப்பு றோட்டரிக் கழகம் மற்றும் செலான் வங்கி ஆகியன அனுசரணை வழங்கியிருந்தன.
athavannews.com
0 Comments