வெலே சுதாவின் அரசியல் சகாவும் காப்பாளரும் என அறியப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பாரத லக்ஷ்மன் கொலைச் சம்பவத்தின் போது தலையில் காயத்துக்குள்ளான வேளையில் அவருக்கு சிகிச்சையளித்து அவரது மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவச் சான்றிதழ் அளித்திருந்த நரம்பியல் நிபுணர் மருத்துவர் மஹேஷி விஜேரத்ன, நேற்றிரவு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் இன்னொரு பெண்ணைத் தாக்கி காயப்படுத்திய விவகாரத்தின் அடிப்படையில் பொலிஸ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
எனினும், ஒருவர் மீது ஒருவர் மாறி குற்றஞ்சுமத்தியுள்ளதால் இரு பெண்களையும் பொலிசார் விசாரிப்பதாகவும்
மருத்துவர் மஹேஷியினால் தாக்கப்பட்டவர் 20 தையல்களுடன் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு கையில் இருந்த கிளாஸ் ஒன்றை உடைத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments