Ticker

6/recent/ticker-posts

பில்கேட்ஸ் உலக செல்வந்தர் வரிசையில் முன்னிலையில்..!

இவ்வருடத்துக்கான உலகின் நம்பர் 1 பணக்காரராக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில்கேட்ஸ் மறுபடியும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையால் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

இதன் மூலம் கடந்த 20 வருடங்களில் 16 வருடங்களாக பில்கேட்ஸே இந்த முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு புதிய சாதனையையும் படைத்துள்ளார். ஃபோர்ப் பத்திரிகையால் வெளியிடப் பட்டுள்ள உலகின் அதிசிறந்த பணக்காரர்கள் (அல்லது கோடீஸ்வரர்களில்) இனது தரவரிசையில் 2 ஆவது இடத்தில் மெக்ஸிக்கோவின் தொழில் அதிபர் கார்லொஸ் ஸ்லிம் உள்ளார்.

பில்கேட்ஸின் நடப்பு சொத்து மதிப்பு $79 பில்லியன் டாலர்களாகும். கார்லோஸினது சொத்து மதிப்பு 77.1 பில்லியன் டாலர்களும் 3 ஆவது இடத்திலுள்ள அமெரிக்காவின் வாரன் பஃப்பெட் இனது சொத்து மதிப்பு 72.7 பில்லியன் டாலர்களாகும். ஃபோர்ப்ஸ் பத்திரிகை இவ்வருடம் மொத்தம் உலகளாவிய ரீதீயில் 1826 கோடீஸ்வரர்களது பதிவை வெளியிட்டுள்ளது.

இப்பதிவில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களது விபரம் கீழே:

Forbes 2015 ranking of richest people:

1. Bill Gates $79.2bn (Microsoft)

2. Carlos Slim Helu $77.1bn (Phones and construction in Mexico)

3. Warren Buffett $72.7bn (Global investor)

4. Amancio Ortega $64.5bn (Zara and other fashion chains)

5. Larry Ellison $54.3bn (Oracle data storage technology)

6. Charles Koch $42.9bn (Industrialist)

7. David Koch $42.9bn (Industrialist)

8. Christy Walton $41.7bn (Walmart retail giant)

9. Jim Walton $40.6bn (Walmart retail giant)

10. Liliane Bettencourt $40.1bn (L'Oreal cosmetics firm)

Post a Comment

0 Comments