Ticker

6/recent/ticker-posts

ஆர்ப்பாட்டம் செய்வோருக்கு அஜித் ரோஹனவின் எச்சாிக்கை!

பொதுமக்கள் பயணம் செய்யும் போக்குவரத்துப் பாதையை இடைமறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் யாராக இருப்பினும்,  உடன் கைது செய்யப்பட்டு,  நீதிமன்றத்தில் ஆஜர்  செய்யப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு இடம்பெறும் அசௌகரியங்களை தவிர்க்கும் பொருட்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொருவருக்கும் சமாதானமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு உரிமையுள்ளது.   பாதையை மறைத்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதாயின் அதனை சீர் செய்ய பொலிஸார் தலையிடுவதைத்  தவிர்க்க  முடியாது.

இதன்போது,   பொலிஸாரின்  செயற்பாட்டுக்கு  தடையாக செயற்படுவார்களாயின் பொலிஸாரின் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டி ஏற்படும்.   இதன்பின்னர், இது குறித்து பொலிஸார் கண்டிப்பாக செயற்படுவார் எனவும் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments