இலங்கையில் கடந்த நான்கு வருடங்களின் பின்னர் இன்று முதல் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் ஒழுங்கு துறை மற்றும் அனர்த்த முகாமைத்துவ துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை அறிவித்துள்ளார்.
இரட்டை குடியுரிமைக்காக இதுவரை சுமார் 300 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர்.
குறித்த விண்ணப்பங்களும் புதிய விண்ணப்பங்களுடன் பரிசீலிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இரட்டை குடியுரிமை விண்ணப்பங்களின்போது வயது வந்தவர்களுக்கு 250,000 ரூபா அறிவிடப்படும்.
முன்னர் குறித்த தொகை 5 இலட்சமாக ரூபாவதாக இருந்தது.
22 வயதுக்கு குறைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபா அறிவிடப்படவுள்ளது.
இந்தநிலையில் இரட்டை குடியுரிமைக்கான தகுதிகள் தொடர்பான விபரங்கள் குடிவரவு, குடியகல்வு திணைக்கள இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே இரட்டை குடியுரிமை பெற்றுள்ள சுமார் 2000 பேர் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெறுகின்றன.
இதன்போது குற்றமுள்ளவராக யாரேனும் இனங்காணப்பட்டால் அவரின் இரட்டைக் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

0 Comments