Ticker

6/recent/ticker-posts

சிங்கப்பூரின் தேசத்தந்தை லி குவான் யூ (Lee Kuan Yew) மறைந்தார்

சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி குவான் யூ காலமானதாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கடந்த பல வாரங்களாக அவர் கடுமையாக நியுமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பிரிட்டனிடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறும் போராட்டத்தை முன்னின்று நடத்திய லீ க்வான் யூ பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூரை பிாித்து தனியாட்சிக்கு கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுத்திருந்தார்.
சிங்கப்பூரின் பிரதமராக செயற்பட்ட மூன்று தசாப்த காலத்தில், அந்த நாடு, பாரிய இயற்கை வளங்கள் ஏதுவுமற்ற ஒரு சாதாரண துறைமுகம் என்ற நிலையில் இருந்து உலகளவில் பிரகாசிக்கும் வர்த்தக மையமாக உருவான ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தினார்.

கருத்துமுரண்பாடுகளை கொண்டவர்களை சிங்கப்பூரின் தேசத்தந்தை லீ க்வான், நீதிமன்றங்களை வைத்து ஒடுக்கியதை அவரை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்யுள்ளனர்.

ஆனால் லீ க்வான் உள் நாட்டிலும், வெளி நாடுகளிலும் பலராலும் புகழப்படும் ஒரு தலைவராகவே இருந்துள்ளார் என ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
 
இந்தநிலையில், சிங்கப்பூரின் முதல் பிரதமர் லி குவான் யூ தனது 91 ஆவது வயதில் மறைந்தார் என்ற செய்தி சிங்கப்பூர் ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூரை செல்வந்த மையமாக மாற்றியதற்காக அவர் பரவலாக பாராட்டப்பட்டாலும் அவரது சர்வாதிகார ஆட்சிமுறை மீது விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments