கோத்தாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருக்கும் போது விமானப்படைக்கு மிக் ரக விமானங்களைக் கொள்வனவு செய்ததில் முறைகேடு இடம்பெற்றதாக சண்டே லீடர் பத்திரிகையில் வெளியாகியிருந்த தகவல் ஒன்றுக்கு எதிராக கோத்தாபய ராஜபக்சவினால் தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணை குறித்த ஊடகம் கோத்தபாய ராஜபக்சவிடம் மன்னிப்புக் கோரியதையடுத்து கைவிடப்பட்டுள்ளது.
தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் குறித்த செய்தி அமைந்திருந்ததாகக் கூறி ரூ.10 கோடி கோரும் மான நஷ்ட வழக்கினை கோத்தாபய தொடர்ந்திருந்திருந்தார்.
எனினும் இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதி மன்றில் குறித்த ஊடகம் தாம் தவறிழைத்து விட்டதாக மன்னிப்புக் கோரியதையடுத்து குறித்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளமையும் கோத்தாபய மன்னிப்பு வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 Comments