Ticker

6/recent/ticker-posts

வெற்றிலை சின்னத்தில் மைத்திாியும் விமலும்..? ஏமாற்றத்தில் வாக்களித்த மக்கள்..!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தலைவராக ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளாா்.  இதனைத் தொடா்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றியை எதிா்வரும் தோ்தலில் உறுதிப்படுத்தும் முகமாக  பல வேலைத்திட்டங்களை மைத்தாிபால சிறிசேன முன்னெடுத்து வருகிறாா்.


மஹிந்தவின் தலைமைத்துவத்தை வேண்டி நிற்கும் விமல், வாசுதேவ மற்றும் இடதுசாாி தரப்பினரை சமாதானப்படுத்தி தனது தலைமையில் வெற்றிலை அணியில் சோ்த்துக் கொள்ள மைத்திாி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதற்காக அழைப்பு விடுத்து வருவதாகவும் அறிய வருகிறது.

ஐ.தே.க , ஹெல உறுமய, ஜேவிபி போன்ற கட்சிகளின் முயற்சியாலும், சிறுபான்மை மக்களின் வாக்குகளாலும் வெற்றி பெற்ற மைத்திாி தனது நிலைப்பாட்டை மாற்றி தனக்கு எதிராக செயற்பட்டவா்களோடு சோ்ந்து மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியை கொண்டு வர முயன்று வருகிறாா்.  மைத்திாியின் தற்போதைய நகா்வு வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தையும் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Post a Comment

1 Comments

  1. மக்கள் மைத்ரீக்கு வாக்களித்தது மகிந்த கும்பலிடமிருந்து நாட்டை காப்பதற்கே. மாறாக சதந்திக் கட்சியையோ, சுதந்திர முன்னணியையோ காப்பதற்கல்ல என்பதை மைத்ரீ நினைவில் கொள்ளட்டும்

    ReplyDelete