உலகிலேயே முதல் முறையாக தாய்லாந்தில் செயற்கை கால் பொருத்தப்பட்ட பெண் யானை தனது பணிகளை வழக்கம்போல் செய்து பார்வையாளர்களை கவர்ந்து வருகின்றது.
கம்போடியா எல்லையோரமுள்ள வனப்பகுதியில் புதைத்து வைக்கப்படிருந்த கண்ணி வெடியில் குறித்த யானை சிக்கியதன் காரணமாக ஒரு காலை பறிகொடுத்தது.
மோஷா என்ற இந்த பெண் யானைக்கு தாய்லாந்திலுள்ள ஆசியா யானைகள் வைத்தியசாலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
மூன்று கால்களுடன் வாழ்ந்து வந்த மோஷா, பல நாட்கள் சாப்பிட மறுத்த நிலையில் உடல் மெலிந்து காணப்பட்டது.
பிளாஸ்டிக், மரத்தூள் மற்றும் உலோகங்கள் சேர்ந்த கலவையால் மனிதர்களுக்கு பொருத்தும் செயற்கை கால்களைப் போலவே மோஷாவுக்கும் ஒரு செயற்கை காலை வைத்தியர்கள் தயாரித்தனர்.
தற்போது, அந்த காலின் உதவியுடன் தனது வழக்கமான பணிகளை உற்சாகமாக செய்யும் மோஷாவை கவனித்து வரும் உதவியாளன் தூங்கும் போது மட்டும் செயற்கை காலை கழற்றி வைத்து விடுகிறார்.
புதிய கால் கிடைத்தவுடன் புதிய வாழ்க்கையே கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் இப்போதெல்லாம் சுமார் 150 கிலோ உணவு வகைகளை சாப்பிடுகின்றது.
0 Comments