Ticker

6/recent/ticker-posts

கோத்தாபயவை பாதுகாக்க முயற்சிக்கின்றார் லக்ஸ்மன் கிரியல்ல - ஸ்ரீலால் லக்திலக்க குற்றச்சாட்டு

அமைச்சர் லக்ஷமன் கிரியல்ல முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை பாதுகாக்க முயற்சிப்பதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பின் உறுப்பினர் ஸ்ரீலால் லக்திலக்க தெரிவித்துள்ளார்.
அவன்கார்ட் மற்றும் ரக்ன லங்கா நிறுவனங்களில் மோசடிகள் இடம்பெறவில்லை என லக்ஷமன் கிரியல்ல அண்மையில் நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார்.இந்த கருத்தானது புரிந்துணர்வு இன்றி அவசரமாக வெளியிடப்பட்ட கருத்தாகவே அமைந்துள்ளது. நாட்டு மக்களையும் நாடாளுமன்றத்தையும் அமைச்சர் கிரியல்ல பிழையாக வழிநடத்தியுள்ளார்.

இந்த இரண்டு நிறுவனங்களின் ஊடாகவும் பாரியளவில் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments