Ticker

6/recent/ticker-posts

அமைச்சர் றிஷாத் பதியுதீன் எனது சவாலை ஏற்றுக் கொள்வாரா? - குவைதிர்கான்

அமைச்சர் றிஷாத் பதியுதீன் தொடர்பாக என்னால் இலஞ்ச ஊழல் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல கருத்துகள்விமர்சனங்கள்விவாதங்கள் இடம்பெற்று வருவதை நீங்கள் அறிவீர்கள்.

அமைச்சர் றிஷாத் பதியுதீன் பற்றி முன்வைக்கப்பட்டிருக்கும் ஊழல் குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக என்னால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எவ்வித தனிப்பட்ட காரணங்களாலும்,  குரோதங்களாலும் முன்வைக்கப்படவில்லை என முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அராஜகம் நிறைந்த மஹிந்தவின் குடும்ப ஆட்சிக்கு உறுதுணையாக இருந்து நாட்டு மக்களின் சொத்துக்களை கொள்ளையிட்ட ஒரு கூட்டத்தின் பங்குதாரராகவே கடந்த காலங்களில் இந்த றிஷாத் இருந்துள்ளார். இவர் அரசியலைப் பயன்படுத்தி முறையற்ற வகையில் சொத்துகளை குவித்துள்ளதை எந்த முஸ்லிமாலும் அங்கீகரிக்க முடியாது.

அமைச்சர் றிஷாதினால் கூலிக்கமர்த்தப்பட்ட ஒரு சிலர் அவரின் ஊழல்களையும்சட்ட விரோத சொத்து குவிப்புகளையும் நியாயப்படுத்தி வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களாக இருந்தும் ஊழல்களை ஆதரித்து வருவதற்கான ஆதாரம் எங்கிருந்து பெறுகிறார்கள் என்பதை என்னால் அறிய முடியாமல் இருக்கிறது. புத்திஜீவிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர் ஊழல் மோசடியில் பெயர் போன இந்த அமைச்சரின் எடுபிடிகளாக இருந்துக் கொண்டு இவரின் சட்ட விரோத உழைப்பில் சம்பளம் பெறுபவர்களாகவும் இருக்கின்றனர்.

பொது மக்களின் சொத்துக்களை சூறையாடுவதை இஸ்லாம் ஒரு போதும் அங்கீகரிக்கவில்லை. தான் உழகை;கும் சொத்து ஹலாலாக எப்போதும் இருக்க வேண்டும் என்றே இஸ்லாம் கட்டளையிடுகிறது. மறுமை வாழ்க்கையில்  நம்பிக்கையில்லாத மஹிந்த சகோதரர்கள் செய்த மோசடிகளில் இந்த றிஷாதுக்கும் அதிக பங்கு இருக்கிறது என்ற தகவல் இன்னும் கொஞ்ச நாட்களில் இன்னும் ஊர்ஜிதமாக வெளிவரத்தான் போகிறது. 

றிஷாதின் உற்ற நண்பனானஊழல்களுக்கு தலைவனானஇன்றும் றிஷாதால் போற்றிப் புகழப்படுகின்ற பசில் ராஜபக்ஷவை விசாரிக்கும் முயற்சி மைத்திரி அரசால் முன்னெடுக்கப்பட இருக்கின்றன. வடக்கின் வசந்தம் என்றும் அபிவிருத்தி என்ற போர்வையிலும்பசிலோடு சேர்ந்து றிஷாத் செய்த மோசடிகள் நான் முன்வைத்ததை விட அம்பலத்திற்கு வரத்தான் போகின்றது. 

ஊழல்களின் மூலம் சேர்த்த தனது சொத்துக்களை பாதுகாத்து கொள்வதற்காகவே இவர் மைத்திரியின் பக்கம் சரிந்து வந்தார். முஸ்லிம் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களாலேயே வெறுக்கப்பட்டு,நிராகரிக்கப்பட்டிருந்த தருணத்தில்தந்திரமாக கட்சி மாறிய இந்த தலைமைகளை முஸ்லிம்கள் இன்னும் சந்தேகக் கண்ணோடுதான் பார்த்து வருகின்றனர். 

மஹிந்தவிடமிருந்து பிரிந்து வந்த அன்றே பசில் ராஜபக்ஷவை புனிதராக  புகழ்ந்து தள்ளிய றிஷாதின் வெட்கம் கெட்ட செயற்பாட்டின் பின்னணியில் பசிலை சமாதானப்படுத்தும் அரசியல் தந்திரமே இருந்ததாக அனைவரும் அறிந்திருந்தனர். ''ஒன்றாக சாப்பி;ட்டு விட்டு உன்னை நான் உதறித் தள்ளவில்லைஎன்ற செய்தியைத் தான் அன்று றிஷாத் மறைமுகமாக ஊழல்களின் தலைவனாக கருதப்படும் பசிலுக்கு எத்திவைத்தார்.

அமைச்சர் றிஷாதின் முறையற்ற சொத்து குவிப்பு தொடர்பாக நான் முன் வைத்த ஆதாரங்களை மறுக்க திராணியில்லாத அமைச்சர் றிஷாத்இணையதளங்களில் கூலிப்படை ஒன்றை நிறுத்தி எனக்கு சேறு பூசும் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளார். 

2000ம் ஆண்டுக்கு முன்னர் றிஷாதுக்கோ அவரின் சகோதரர்களுக்கோ சொந்தமாக ஒரு மோட்டார் சைக்கள் இருந்ததாக நிரூபித்தால் எனது நடவடிக்கையை நான் நிறுத்திக் கொள்வதாக அறிவித்திருந்தேன். ஆனால் அந்த சவாலை எதிர்கொள்ள திராணியற்ற இவர்கள். தற்போது மக்களை வேறு பக்கம் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்முஸ்லிம் இனவாத முரண்பாடுகளை பரப்பி இந்த பிரச்சினையை மூடி மறைக்க முயற்சி செய்து வருகின்றனர். தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளுக்கும் இவரின் சட்ட விரோதமான சொத்துக் குவிப்புக்கும் சம்பந்தமே கிடையாது. இவர் முஸ்லிம்களையும்தமிழ் மக்களையும் காட்டி நிறைய சம்பாதித்துள்ளார். என்பதுவே உண்மையாகும்.

புலிகளால் விரட்டப்பட்டு உடுத்த உடையோடுவெறும் கையோடு அகதியாக வந்த இவர் அரசியல் பிரவேசத்தின் பின்னர் இப்படி கோடானு கோடி ரூபாய்களை எப்படி சொந்தக்காரராக மாறினார்நாட்டின் பல பாகங்களிலும் இவருக்கு பல நூறு ஏக்கர் காணிகளுக்கு சொந்தக்காரனாக இவர் எப்படி மாறினார் என்று கேட்பதற்குறிய உரிமை முஸ்லிம் என்ற ரீதியிலும்இந்நாட்டு பிரஜை என்ற ரீதியிலும் எனக்கிருக்கிறது. இதை எந்த அச்சுறுத்தலாலும் தடுக்க முடியாது என்பதை இவர்களுக்கு தைரியத்துடன் கூறி வைக்கிறேன்.

முஸ்லிம்களைக் காட்டி அரசியல் வியாபாரம் செய்யும் இந்த மோசடி அரசியல் வியாபாரிகளுக்கு எதிராக தொடரப்படும் இந்த போராட்டத்தை எந்த பேஸ்புக் கூலிப்படையாலும் தடுக்க முடியாது என்று கூறி வைக்க விரும்புகிறேன். 

றிஷாத் சிறந்த ஒரு முஸ்லிம் அரசியல் தலைவர் என்று வெட்கமில்லாத முறையில் இந்த கூலிப்பட்டாளங்கள் சமூக வலை தளங்களில் கொக்கரித்துத் திரிகின்றன. ஊழல்களுக்கு தலைவராக இருக்கும் ஒருவர் எப்படி உண்மையான முஸ்லிம்களுக்கு தலைவராக இருக்க முடியும்?
முஸ்லிம் தலைவனுக்குரிய இலட்சனங்கள் என்னதிருட்டுத்தனமாக ஊழல்கள் மூலம் உழைத்து சொத்து சேர்த்த ஒருவரை முஸ்லிம் என்ற அடைமொழிக்குள் வைப்பதற்கு தலைவனாக கணிப்பதற்கு இந்த கூலிப்படைகளுக்கு ஆதாரம் எங்கிருந்து வந்திருக்கிறதுநேர்மையாக ஆள்வதற்கு இஸ்லாம் போதிக்கின்றதே தவிர கள்ளர் கோஷ்டிகளோடு கும்மாளம் போட்டு விட்டு முஸ்லிம் முகமூடி அணிய எவருக்கும் இஸ்லாம் அனுமதி தருவதில்லை என்ற செய்தியை இலங்கை மக்களுக்கு சொல்வது முஸ்லிம் என்ற ரீதியில் எனது கடமை என்று நினைக்கிறேன்.

ஊழல்மோசடிஅநீதிக்கு எதிராக போராடுவது ஒரு முஸ்லிமின் கடைமையாகும். அல்லாஹ்வின் பாதுகாப்பு இந்த போராட்டத்திற்கு இருக்கிறது என்ற அடிப்படை நம்பிக்கை எனக்கிருக்கிறது.

நன்றி!

ராசிக் எம். குவைதிர்கான்
ஸ்தாபக தலைவர்,
வட மாகாண முஸ்லிம்கள் அமைப்பு.
0094773755758

Post a Comment

0 Comments