விரைவில் வெளியாக உள்ள ‘தேஷ் பக்த் நாதுராம் கோட்சே’ திரைப்படத்தில்,
மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தராகவும்,
காந்தியை இந்துக்களுக்கு எதிரானவராகவும் சித்தரித்து இருப்பதாக அகில பாரதீய
இந்து மகாசபை பொதுச்செயலாளர் முன்னா குமார் கூறி இருக்கிறார். இந்த
திரைப்படம் வெளியானால் மத நல்லிணக்கத்துக்கு தீங்கு ஏற்படும். எனவே, கோட்சே
திரைப்படத்தால் மதவாத பிரச்சினைகள் ஏற்படாது என்று அதன் தயாரிப்பாளர்
கோர்ட்டில் உறுதி அளிக்கும் வரை, அந்த படம் வெளியாவதற்கு தடை விதிக்க
வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி கே.எம்.பிங்கிள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டவர் இன்னும் கோர்ட்டில் ஆஜராகவில்லை. கோட்சே திரைப்படம் இன்னும் வெளியாகவும் இல்லை. எனவே, பிரதிவாதியின் வாக்குமூலத்தை கேட்டறியாமல், இதுபோன்ற மனுக்களை விசாரிக்க முடியாது’’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

0 Comments