இயக்குநர் இளங்கோ ராமின் இயக்கத்தில் உருவான மௌன விழித் துளிகள் எனும் குறுந் திரைப்படம் நான்காவது தடவையாகவும் சிறந்த வெளிநாட்டு குறுந்திரைப்பட விருதைப் பெற்றுக் கொண்டுள்ளது.
கடந்த வாரம் லண்டலில் நடைபெற்ற சர்வதேச film maker விருது வழங்கல் விழாவில் குறுந்திரைப்படம் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
யுத்த காலத்தில் பதுங்கு குழியொன்றில் அடையும் துயரங்கள் தொடர்பில் மௌன விழித் துளிகள் எனும் குறுந் திரைப்படம் எடுத்துக் காட்டுகிறது.
யுத்த காலத்தில் பதுங்கு குழியொன்றில் அடையும் துயரங்கள் தொடர்பில் மௌன விழித் துளிகள் எனும் குறுந் திரைப்படம் எடுத்துக் காட்டுகிறது.
சிறந்த வெளிநாட்டு குறுந்திரைப்பட தேர்வின் போது இயக்குநர் இளங்கோ
ராமின் மௌன விழித் துளிகள் எனும் இந்த குறுந்திரைப்படம் இதற்கு முன்னரும் மூன்று தடவைகள் விருதுகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடைபெற்ற விருது வழங்கள் விழாக்களின் போது இந்த திரைப்படம் இரண்டு தடவைகள் முதலாம் இடங்களைப் பெற்றுக் கொண்டதுடன், கடந்த மாதம் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கல் விழாவின் போது மௌன விழித் துளிகள் குறுந்திரைப்படம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.
இந்த நிலையிலேயே கடந்த வாரம் லண்டலில் நடைபெற்ற சர்வதேச film maker விருது வழங்கல் விழாவின் போது இந்தக் குருந்திரைப்படம் சிறந்த வெளிநாட்டு குறுந்திரைப்பட தேர்வில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

0 Comments