Ticker

6/recent/ticker-posts

பாப்பாண்டவரை சந்தித்த மஹிந்த ராஜபக்ச

பரிசுத்த பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் திருத்தந்தைக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. 
நேற்று மாலை அபோஸ்தலிக்க தூதுவர் உத்தியோகபூர்வ இல்லதத்தில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் மஹிந்த ராஜபக்சவின் குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

மிகவும் சுமூகமான முறையில் நட்பு ரீதியாக இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

சுமார் இருபது நிமிடங்கள் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக கொழும்பு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாப்பாண்டவரின் ஊடகப் பேச்சாளர் பெட்ரிக்கோ லம்பாதீ அருட்தந்தை தெரிவித்துள்ளார்.

பாப்பாண்டவரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வத்திக்கானுக்கு விஜயம் செய்து மஹிந்த ராஜபக்ச இந்த அழைப்பினை விடுத்திருந்தார்.

Post a Comment

0 Comments