Ticker

6/recent/ticker-posts

நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளின் அட்டூழியம் : 24 பேர் கொலை..! -

ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்து வரும்  போகோ ஹராம் தீவிரவாதிகள் நேற்று நைஜீரியாவின் வடகிக்குப் பகுதியில் உள்ள போர்னோ மாகாணத்தில் தாக்குதல் நடத்தி 24 பேர்களைக் கொன்றுள்ளதாக அந்நாட்டிலிருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்குள்ள க்வாஜபா Kwajafa  கிராமத்திற்கு, மதபோதனை செய்ய இருக்கிறோம் என்று கூறிக் கொண்டு, நேற்று முன்தினம் (4-ம் திகதி) நள்ளிரவு காரில்
வந்திறங்கிய போகோ ஹராம் தீவிரவாதிகள், பள்ளிவாசலுக்கு அருகே கூடியிருந்த மக்கள் மீது திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்கள்.  அத்துடன், கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும் தீ வைத்து கொளுத்தியதாகவும் அறிய வருகிறது.

இந்த தாக்குதலில் குண்டடி பட்டு படுகாயமடைந்தவர்கள் போர்னோ மாகாணத்தில் உள்ள மருத்துவன்மையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments