பாகிஸ்தான் தெற்காசியாவின் ஸ்திரத்தன்மைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக திகழ்கிறது என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தலையங்க கட்டுரையில் எழுதி உள்ளது.
‘தெற்காசியாவின் அணு அச்சங்கள்’ என்று தலைப்பிட்டு ‘நியூயோர்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்டு உள்ள தலையங்க கட்டுரையில், ஈரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் பேச்சு வார்த்தை நடத்துவதில் உலகின் கவனம் சரியாகவே அமைந்தது. இந்த திட்டம் இறுதி செய்யப்படும்போது, அதில் பங்காற்றிய உலகின் முக்கிய சக்தி வாய்ந்த நாடுகளான சீனா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை தங்கள் கவனத்தை தெற்காசியாவின் பக்கம் திருப்ப வேண்டும். அந்தப் பிராந்தியம், வளர்ந்து வருகிற அணு அபாயங்களால் சிக்கலில் உள்ளது.
தெற்காசியாயாவை உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் அசட்டை செய்து விட முடியாது. இந்தியப் பெருங்கடலில் அணு ஆயுதங்களை நிறுத்துவதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் முன்னோக்கி சென்று கொண்டிருக்கின்றன. ஆனால் பாகிஸ்தான் மட்டும்தான், பிராந்திய ஸ்திரத்தன்மையை பாதிக்கிற வகையில் உள்ளது. சீனா தனது அணு ஆயுத திட்டங்களை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த நாட்டிடம் தற்போது 250 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தெற்காசிய பகுதியை பொறுத்தமட்டில் சந்தேகத்துக்கு இடமின்றி, பாகிஸ்தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பாகிஸ்தான் தொடர்ந்து அணு ஆயுதங்களில் முதலீடு செய்து வருகிறது. இந்தியாவுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது.
பொருளாதார சீர்குலைவால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருக்கிறது. அரசியல் அமைப்புகள் பலவீனம் அடைந்திருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக அந்த நாட்டை வீழ்த்த தலீபான் தீவிரவாத அமைப்பு முயற்சிக்கிறது. பாகிஸ்தானிடம் 120 அணு ஆயுதங்கள் இருக்கும் நிலையில், இந்தியாவிடம் 110 அணு ஆயுதங்கள் உள்ளன. 2008-ம் ஆண்டு, மும்பையில் நடத்தியது போன்று, இந்தியாவில் (பாகிஸ்தான்) தீவிரவாதிகள், நாசவேலையில் ஈடுபட்டால், இந்தியாவிடமிருந்து சரியான பதிலடியை பாகிஸ்தான் எதிர்பார்க்கலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெளிவுபடுத்தி உள்ளார்.
(இந்தியாவுடன்) மோதல் ஏற்படும் பட்சத்தில், அணு ஆயுதத்தை பயன்படுத்தும் முதல் நாடாக பாகிஸ்தான் இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. நவீன ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில், பல நூறு கோடி டாலர்களை பாகிஸ்தான் வீணாக்கி வருகிறது. அதை அந்த நாட்டின் சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பினை உருவாக்குவதற்கு பயன்படுத்தி இருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0 Comments