Ticker

6/recent/ticker-posts

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்கு இடைக்காலத்தடை

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க, இந்திய உச்சநீதிமன்றம் வரும் 15-ம் தேதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது.  

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராக எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மனுத்தாக்கல் செய்திருந்தார். 


இந்த மனு, நீதிபதிகள் மதன் பி லோக்கூர், பானுமதி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பாலி நரிமன், மேல்முறையீட்டு வழக்கின் வாதம் நிறைடைந்த நிலையில், பவானி சிங்கை நீக்க கோருவது அர்த்தமற்றது என்று வாதாடினார். 

கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராவ், மேல்முறையீட்டு வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் நியமனம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருந்து எந்த அறிவுறுத்தலும் கர்நாடக அரசுக்கு வரவில்லை எனத் தெரிவித்தார். அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் அர்ஜுனனும் இறுதி வாதத்தை பதிவு செய்தார். 

இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்புக்கும் இடைக்கால தடை விதித்தது. வரும் 15-ம் தேதி வரை தீர்ப்பு வழங்க, கர்நாடக உயர்நீதிமன்ற அமர்வுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர் 

Post a Comment

0 Comments