Ticker

6/recent/ticker-posts

"இசைமுரசு" நாகூர் ஹனீபா காலமானார்!

பிரபல இஸ்லாமிய பாடகரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார பாடகராக கம்பீரக் குரலில் முழங்கியவருமான "இசைமுரசு" நாகூர் ஹனீபா (வயது 90) சென்னையில் இன்று காலமானார். 

இஸ்லாமிய கீதங்களுக்கு அடையாளமாக திகழ்ந்த நாகூா் ஹனிபாவின் பாடல்கள் தமிழ்பேசும் உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. நாகூர் ஹனீபாவின் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் இன மத பேதமின்றி அனைவரையும் கொள்ளை கொண்ட பாடலாகும். 

இந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசார பாடகராக ஹனீபா பாடிய பாடல்கள் காலத்தால் அழியாதவை. பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து தமது பாடல்கள் மூலம் தி.மு.க. வளர்ச்சிக்கு உரமாக இருந்தவர் நாகூா் ஹனீபா. 


Post a Comment

0 Comments