Ticker

6/recent/ticker-posts

காற்றின் விசையில் இயங்கும் வாகனம்

காற்றின் அழுத்த விசையால் இயங்கும் சிறிய அளவிலான வாகனத்தை இந்தியா, தமிழ்நாடு நெல்லை பொறியியல் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். 

காற்றின் அழுத்ததால் இயங்கும் இதுபோன்ற வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருக்கும் என்றும் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் சீதபற்ப நல்லூர் அருகில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியின் மெக்கானிக்கல் துறையை சேர்ந்த மாணவர்களே இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் ஆவர். 


சிறிய அளவிலான சிலிண்டரில் காற்றை நிரப்பி அதன் மூலம் இயங்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் தயாரிக்க, 50 ஆயிரம் செலவானதாக தெரிவிக்கும் மாணவர்கள், இந்த முயற்சி வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.  வித்தியாசமாக ஏதையாவது செய்ய நினைத்ததன் முயற்சிக்கு பலனாக உருவானதே இந்த வாகனம் என்று கூறும் மாணவர்கள், 8 பேர் கொண்ட குழுவினர், சிறு சிறுக் குழுக்களாக பிரிந்து, வாகனத்தை வடிவமைத்தோம். 

காற்று அழுத்தத்தினால் இயங்கும் இந்த கார் வரும் காலங்களில் பயனுள்ளதாக இருக்கும். இன்னும் சில வருடங்களுக்கு பிறகு பெட்ரோல் கிடைப்பது கடினம் அப்போது காற்றுதான் மாற்று எரிசக்தியாக இருக்கும் அதுமட்டுமல்லாமல் சுற்று சூழலுக்கு உதவியாக இருக்கும். அதிநவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப வாகனத்தை வடிவமைக்க, போதிய நிதி இல்லை என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், பல்வேறு தரப்பினரின் ஊக்குவிப்பும், ஆதரவும் இந்த வாகனத்தை உருவாக்க உதவியாக இருந்ததாக அவர்கள் மகிழ்ச்சியுடன் கூறினர்.

Post a Comment

0 Comments