முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தற்போது ராஜபக்ஷ குடும்பத்தினர் தொடர்பாக வெளியிட்டு வரும் தகவல்களால், மகிந்த ராஜபக்ஷ உட்பட முக்கிய நபர்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வருவதாக தெரியவருகிறது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் வழங்கி பேட்டி ஒன்றில் கருத்து வெளியிட்ட மேர்வின் சில்வா, ராஜபக்ஷவினர் செய்யுமாறு கூறிய வேலைகளையே தாம் செய்ததாகவும் பின் அவர்கள் செய்நன்றி மறந்து போயினர் என்றும் கூறியிருந்தார்.
அத்துடன் வெள்ளை வான் சம்பவங்களின் பின்னனியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இருப்பதாகவும் அவர் வெள்ளை வான் கலாச்சாரத்தின் பிதாமகன் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டிருந்தார்.
தன்னிடம் இதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும், கோத்தபாய ராஜபக்ஷ உருவாக்கியுள்ள கொலை செய்யும் குழுக்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவதாகவும் இந்த தகவல்களை வெளியிடுவதால், தனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
0 Comments