பிரிட்டனில் திருமண மணப்பெண் ஒருவர் சவப்பெட்டியில் வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
திருமணம் நடைபெறும் போது மணப்பெண் காரில் அல்லது குதிரை வண்டியில் வருவது வழக்கம். ஆனால் பிரிட்டனில் மணப்பெண் ஒருவர் சவப்பெட்டியில் வந்து, அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளார்.
பிரிட்டன் வேல்ஸை சேர்ந்த ஜெனி பக்லெஸ் Jenny Buckless (58). மணப்பெண்ணான இவர் தனது திருமணத்தின் போது தனக்கென்றே அளவெடுத்தாற் போன்று ஒரு சவப்பெட்டி தயார் செய்து திருமணம் நடைபெறும் இடத்திற்கு சவப்பெட்டியில் வந்து இறங்கி அனைவரையும் வியக்கச் செய்துள்ளார். அவர் பயணம் செய்த சவப்பெட்டி மோட்டார் சைக்கிள் ஒன்றால் இழுத்துச் செல்லப்பட்டது.
மண்டையோடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் போன்ற அலங்காரப் பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டி வந்த தனது சகோதரர் ரொஜரை கௌரவப்படுத்தும் வகையில் இவ்வாறு விநோதமான முறையில் வந்ததாக ஜெனி பக்லெஸ் தெரிவித்துள்ளார்.



0 Comments