கண்டி பிரதேசத்திலுள்ள அச்சகமொன்றில் திடீர் சோதனை நடத்திய பொலிஸார் அங்கிருந்த ஏழு பேரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளனர்.
பிரதமருக்கு அவதூறு ஏற்படும் வகையில் அச்சிடப்பட்டிருந்த சுமார் 800 சுவரொட்டிகளையும் இதன்போது கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.
கண்டி, டி.எஸ்.சேனாநாயக்க வீதியிலுள்ள அச்சகமொன்றிலேயே இந்த சுவரொட்டிகள் அச்சிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்களை இன்று (14) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments