Ticker

6/recent/ticker-posts

விரைவில் ஏலத்திற்கு வரவுள்ள இளவரசி டயானாவின் அரிய திருமண புகைப்படங்கள்

அழகிற்கு இலக்கணமாக திகழ்ந்து கோடிக்கணக்கான மக்களை தன் வசப்படுத்தியவர் இளவரசி டயானா.
இங்கிலாந்தில் கடந்த 1981ம் ஆண்டு இளவரசர் சார்ல்ஸ் – டயானா திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னர், இளவரசி டயானா தனது காதலருடன் காரில் சென்ற போது, அதை படம் பிடிக்க சில பத்திரிகையாளர்கள் இன்னொரு காரில் துரத்தினர். அப்போது இளவரசி டயானா சென்ற கார் விபத்திற்குள்ளானதில் அவர் மரணமடைந்தார்.

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் ஆடை ஒன்று கடந்த 2013 ஆம் ஆண்டு 86 இலட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
சென்ற வருடம் இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் டயானா திருமணத்தின் போது அளிக்கப்பட்ட ஒரு கேக் துண்டு அமெரிக்காவில் 82,500 ரூபாய்க்கு ஏலம் போனது.
இந்நிலையில், டயானாவின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் வருகிற செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி போச்டன் நகரில் ஏலம் விடப்படவுள்ளது.
கறுப்பு-வெள்ளை மற்றும் வர்ணப் புகைப்படங்கள் என்பன இந்த ஏலத்தில் இடம்பெறுகிறது.
இந்த புகைப்படங்கள், இங்கிலாந்து ராணியின் உறவினரும், உதவி புகைப்படக் கலைஞருமான பெட்ரிக் லிச்பீல்டால் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

http://newsfirst.lk/

Post a Comment

0 Comments