Ticker

6/recent/ticker-posts

உலக கிண்ணத்தை மகிந்த வென்றிருந்திருந்தால், இன்றும் அவரே கிரிக்கெட் அணியின் தலைவர்: அர்ஜூன ரணதுங்க

1996 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ணத்தை வென்ற அணியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செயற்பட்டிருந்தால் அவரே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக இதுவரை இருந்திருப்பார் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மீரிகம வெவேல்தெனிய பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மகிந்த ராஜபக்ச, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இரண்டாம் அணித் தலைவர்களை உருவாக்கவில்லை.
1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற பின்னர், இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைத்துவத்தை வேறு ஒருவருக்கு வழங்க என்னால் முடிந்தது. நாட்டை நேசிக்கும் வீரர்கள் என்னிடம் இருந்தனர்.
அவர்கள் ஏனையவற்றை ஒதுக்கி வைத்து விட்டு நாட்டை பற்றி சிந்திக்கும் வீரர்கள். இதனால், அணிக்கு தலைமை தாங்கி உலக கிண்ணத்தை என்னால், நாட்டுக்கு கொண்டு வர முடிந்தது. நாங்கள் விளையாடும் போது இரண்டாம் அணி ஒன்றை உருவாக்குவோம்.
எமக்குப் பின்னர் யார் தலைவர் என எண்ணுவோம். நாங்கள் வழமையாக தலைவர்களை உருவாக்குவோம்.
எனினும் மகிந்த ராஜபக்ச கடந்த காலங்களில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இரண்டாம் அணி தலைவர்கள் உருவாக இடமளிக்கவில்லை.
இதனால், மகிந்த ராஜபக்ச 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணத்தை வென்ற அணியின் தலைவராக இருந்திருந்தால், இலங்கை கிரிக்கெட்அணியின் தலைவராகவே அவரே தொடர்ந்தும் இருந்திருப்பார் என்று எனக்கு எண்ண தோன்றுகிறது.
இவ்வாறு, தான் மற்றும் தனது குடும்பத்தினரின் வெற்றிக்காக மாத்திரமே மகிந்த ராஜபக்ச நடவடிக்கை எடுத்தார் எனவும் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments