Ticker

6/recent/ticker-posts

தாஜூடீனின் உடலை தோண்ட சட்டமா அதிபரிடம் ஆலோசனை

பிரபல றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடீனின் உடலை தோண்டி எடுப்பது குறித்து குற்றப் புலனாய்வு பிரிவினர் சட்டமா அதிபரின் ஆலேசானைகளை கோரியுள்ளதாக காவற்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைத்த பின்னர், உடலை தோண்டி எடுப்பதற்கான நீதவானின் உத்தரவை பெற்றுக்கொள்ள உள்ளதாகவும் காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
உடலை தோண்டி எடுக்கும் வரை உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள தெஹிவளை வைத்தியசாலையில் வீதியில் உள்ள பள்ளிவாசல் மையவாடிக்கு காவற்துறையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

பற்கள் உடைக்கப்பட்டு, விலா எலும்பு முறிக்கப்பட்டு, கழுத்தில் கூரிய ஆயுதத்தினால் குத்தி, கடுமையாக சித்திரவதை செய்து றகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடீன் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
2012ம் ஆண்டு மே மாதம் அவர் கொலை செய்யப்பட்டார். எனினும் வாகன விபத்திலேயே தாஜூடீன் கொல்லப்பட்டதாக அப்போது காவற்துறையினர் தெரிவித்தனர். ஆனால், சட்ட மருத்துவ அறிக்கையில் அவர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தாஜூடீன் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்சவுக்கு சம்பந்தம் இருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இது குறித்து யோஷித ராஜபக்சவிடம் விசாரணை நடத்தப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
tamilwin.com

Post a Comment

0 Comments