படுகொலை செய்யப்பட்டார் என கூறப்படும் பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீன் வழக்கு விசாரணை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவரின் மரணம் தொடர்பிலான விசாரணைகளில் தம்மால் தலையீடு செய்ய முடியாது என பிரதமர், சிராந்திக்கு பதிலளித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வஸிம் தாஜூடீனின் கொலையுடன் சிரந்தியின் தொண்டு நிறுவனத்துக்கு தொடர்பு, ரக்பி வீரா் வஸிம் தாஜூடீனின் கொலையுடன் சிரந்தி ராஜபக்ஷவின்
தன்னார்வ தொண்டு நிறுவனம் தொடர்புபட்டுள்ளமை குறித்த புதிய ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய ஆதாரத்தின் பிரகாரம் தாஜீடீன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் அவரை கடத்துவதற்கு டிபென்டர் ரக வாகனம் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வாகனம் சிரந்தி ராஜபக்ஷ ஸ்தாபித்த சிரிலிய தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறப்பட்டுள்ளது.
உள்ளுர் தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமிருந்து விளையாட்டிற்கு பயன்படுத்தப்படும் வாகனத்துடன் குறித்த டிபென்டர் வாகனத்தை சிரிலிய கொள்வனவு செய்துள்ளது.
பின்னர் இதிலொரு வாகனத்தின் நிறத்தை கறுப்பாக சிரிலிய தன்னார்வ தொண்டு நிறுவனம் மாற்றியுள்ளது. குறித்த கறுப்பு நிற வாகனமே கொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு மூடி மறைக்கப்பட்டமை தொடர்பில் புதிய அரசாங்கம் கேள்வி எழுப்பியதை அடுத்து இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
- எங்கள் தேசம்

0 Comments