எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் உள்ள பாதுகாப்புப் படையினரின் தலைமையகத்தில் கார் குண்டு வெடித்ததில் 6 பாதுகாப்புப் படையினர் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 2 மணியளவில் இந்த குண்டு வெடித்துள்ளது.
நபர் ஒருவர் காரை பாதுகாப்புப் படையினரின் கட்டடத்திற்கு முன்பாக நிறுத்திவிட்டு மோட்டார் பைக்கில் தப்பிச் சென்றதாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வெடிப்பில் கட்டடம் சேதமடைந்துள்ளது.
0 Comments