இலங்கையின் பிரபல ரக்பி வீரரை படுகொலை செய்வதற்கு முன்னர் கடத்துவதற்காக பயன்படுத்திய இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு சொந்தமான டிபென்டர் ரக வாகனத்தை குற்றப்புலானய்வு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
இலங்கை செஞ்சிலுவை சங்கம் இதனை உறுதிசெய்துள்ளது. மேலும் குறிப்பிட்ட வாகனம் எவ்வாறு படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் ஜகத் அபயசிங்க தீவிரவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதையும் செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
குறிப்பிட்ட வாகனம் தற்போது படுகொலை தொடர்பான முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.மேலும் குறிப்பிட்ட வாகனத்தின் நிறம் ஏன் மாற்றப்பட்டது என்பது குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான ஜகத் அபயசிங்க அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையிலேயே சிராந்தி ராஜபக்சவின் அரசசார்பற்ற நிறுவனத்திற்கு குறிப்பிட்ட வாகனத்தை வழங்கியதாக தெரிவித்துள்ளார்.
முன்னாள் சமூகசேவைகள் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா குறிப்பிட்ட வாகனத்தை சிராந்தி ராஜபக்சவின் அரசசார்பற்ற அமைப்பிற்கு வழங்குமாறு கோரினார், அதனடிப்படையிலேயே அதனை வழங்கினோம் என செஞ்சிலுவை சங்;கம் தெரிவித்துள்ளது.
0 Comments